Connect with us

இலங்கை

மகளின் பிறந்தநாளைக் கொண்டாட இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி!

Published

on

Loading

மகளின் பிறந்தநாளைக் கொண்டாட இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி!

 தனது மகளின் 34வது பிறந்தநாளைக் கொண்டாட  இலங்கைக்கு  வந்த பிரித்தானியர் ஒருவர் மலையில் இருந்து தவறுதலாக  கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணியான பிரட் மெக்லீன் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

தனது மகளாக நடாலியின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் கடந்த வாரம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். தந்தையும் மகளும் மாத்தறையில் உள்ள வெலிகம பகுதிக்குச் சென்று, பின்னர் கடந்த 23 ஆம் திகதி எல்ல நகரத்திற்கு சென்றுள்ளனர். தனது மகளுடன் எல்ல மலைகளைப் பார்வையிடச் சென்ற போது திடீரென மலை உச்சியில் இருந்து பிரட் மெக்லீன் கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு பண்டாரவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலை அனுப்பி, அங்குள்ள சிறப்பு மருத்துவ அதிகாரியால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர எல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன