இலங்கை
மூதூரில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!
மூதூரில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!
விழிப்புணர்வு மாதம்” என ஒக்டோபர் மாதம் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என். எம். கஸ்ஸாலி மற்றும் மருத்துவர் (AMOH) எஸ். கே. விஜேவர்தன வின் தலைமையின் கீழ் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நேற்று மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் மூதூர் அக்கறை சேனை தாய்சேய் நிலையம் மற்றும் பாட்டாளிபுரம் தாய்சேய் பராமரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் முறையே நடைபெற்றன.
மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மூலம் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், பரிசோதனையின் அவசியம், தன்னிறைவு பரிசோதனை முறைகள் மற்றும் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கான மருத்துவ பரிசோதனையின் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில், இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
