இலங்கை
வவுனியாவில் ஆரம்பமாகும் வேட்டை : சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்!
வவுனியாவில் ஆரம்பமாகும் வேட்டை : சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்!
வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதையே அடிப்படையாகக் கொண்டு மிரட்டி சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதேவேளை, வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
