Connect with us

உலகம்

30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத அமேசான் நிறுவனம்!

Published

on

Loading

30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத அமேசான் நிறுவனம்!

அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.

நிறுவனச் செலவுகளை குறைப்பதற்காகவும், கொவிட்-19 காலத்தில் அதிகளவான ஒன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இத் தீர்மானம் எடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டுக்கு பின் அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும். கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் பணி புரிந்தனர். பின்னர் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன