விளையாட்டு
IND vs AUS 1st T20I: இந்தியா – ஆஸி. இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து; இந்தியா 97/9.4
IND vs AUS 1st T20I: இந்தியா – ஆஸி. இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து; இந்தியா 97/9.4
India vs Australia Live Score, 1st T20I: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இதில் அபிஷேக் சர்மா 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.இந்திய 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 43 ரன் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் சிறுது தடைப்பட்டது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 9.4 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்ட நிலையில், போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்தியா: அபிஷேக் ஷர்மா, கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.சிக்ஸர் மைல்கல்: சூர்யகுமார் யாதவ், தனது டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 150 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.அவர் நாதன் எல்லிஸின் பந்துவீச்சில் மிடில்-விக்கெட் திசையில் அடித்த சிக்ஸர், இந்த மைல்கல்லை அடைய உதவியது.தற்போதைய பார்ட்னர்ஷிப்: சூர்யகுமார் யாதவ் – சுப்மன் கில் ஜோடி 35 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது.கடைசி 5 ஓவர்கள்: இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது.விக்கெட்டுகள்: இந்தியாவின் முதல் விக்கெட் 3.5 ஓவரில் வீழ்ந்தது. அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு முன், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் (SKY) மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.சூரியகுமார் யாதவ்: 24 பந்துகளில் 39 ரன்கள் (3 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள்)சுப்மன் கில்: 20 பந்துகளில் 37 ரன்கள் (4 ஃபோர்கள், 1 சிக்ஸர்)ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) தனது முதல் ஓவரை வீசத் தயாராக இருந்தபோது, திடீரென மழைத் தீவிரமடைந்தது. தொடர்ந்து, நடுவர்கள் உடனடியாக வீரர்களை ஆடுகளத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டனர். மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை இந்தியா இதுவரை இழந்ததே இல்லை. இதுவரை நடைபெற்ற 4 தொடர்களில் 2 முறை வெற்றியும், 2 முறை டிராவிலும் முடிந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கவுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. போட்டி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், முதலில் ஆடிய ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.சூர்ய குமார் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் டிம் டேவிட் அணிக்கு திரும்பியுள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கிடையிலான இந்த தொடர் 5 ஆட்டங்களை கொண்டது. இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றியுடன் தொடங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
