சினிமா
என்ர மனைவியோட காசில தான் எல்லாம் வாங்குறனான்.! இதற்கு காரணம்… நடிகை ரோஜா கணவர் பகீர்.!
என்ர மனைவியோட காசில தான் எல்லாம் வாங்குறனான்.! இதற்கு காரணம்… நடிகை ரோஜா கணவர் பகீர்.!
திரை உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை ரோஜா. அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்க்கை துணை, பிரபல இயக்குநரான ஆர்.கே.செல்வமணி, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தங்களுடைய குடும்ப வாழ்க்கை குறித்து மிகவும் உண்மையாக, மனதை வருடும் வகையில் பகிர்ந்துள்ளார்.அந்த நேர்காணலில் அவர் கூறிய சில வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளன. “நான் சம்பாதிச்சு 15 வருஷம் ஆச்சு.. ஆனா, இன்னும் அதே மரியாதையோட நான் வீட்டில இருக்கிறேன். அதுக்கு காரணம் அன்பும் புரிதலும் தான்” எனத் தொடங்கிய அவரது பேச்சு, பல குடும்பங்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக மாறியுள்ளது.ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவில் சிறப்பாக திகழ்ந்த இயக்குநர். அவரும் நடிகை ரோஜாவும் திருமண பந்தத்தில் இணைந்தது 2002 ஆம் ஆண்டு. இருவரும் தங்கள் துறையில் வெற்றி கண்டிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை இருவரும் குடும்பத்திற்கே அளித்தனர்.இந்த உறவில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், அது ஒரு பரஸ்பர மரியாதையும் புரிதலும் நிறைந்த உறவு என்பதைச் செல்வமணி பெருமையாக தற்பொழுது சொல்கிறார்.செல்வமணி அதன்போது, “நான் சம்பாதிச்சு 15 வருஷம் ஆச்சு.. ஆனா, இன்னும் அதே மரியாதையோட நான் வீட்டில இருக்கிறேன். அதுக்கு காரணம் அன்பும் புரிதலும் தான். எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டை வருவது சகஜம் தான். ஆனா என்னைக்கும் என் மரியாதை குறைஞ்சது இல்ல. நான் போட்டிருக்கிற டிரெஸ் , வச்சிருக்கிற கார், அதுக்கு போடுற டீசல்ல இருந்து எல்லாமே என் மனைவி தந்த காசு தான். அதை பத்தி எனக்கு கவலையும் இல்ல. ஏன்னா இது நம்மளோட குடும்பம்னு ஏத்துக்கிற மனைவி இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்ல.” என்று கூறியுள்ளார். இந்த ஒரு வரியிலேயே ஒரு வாழ்க்கை தத்துவம் நிறைந்துள்ளது. பலரும் இதை ஒரு மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள். சமூகத்தில் இன்னும் சிலர் “மனைவி சம்பாதித்தால் கணவரின் மரியாதை குறையும்” என்று தவறான எண்ணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், செல்வமணி போன்ற ஆண்களின் திறந்த மனப்பான்மை அந்த எண்ணத்தை உடைக்கிறது.
