இலங்கை
திருத்தல் பணிகள் காரணமாக வடக்கின் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!
திருத்தல் பணிகள் காரணமாக வடக்கின் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!
வடமாகாண ரயில் போக்குவரத்து நாளைமறுதினம் தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ரயில் தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும், வடக்கின் ரயில் மார்க்கத்தைத் தரமுயர்த்தும் செயற்பாடுகளும் நாளைமறுதினம் தொடக்கம் ஒரு வாரத்துக்கு
முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன . இதையடுத்தே ரயில் சேவைகள் பகுதியளவில் இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
