Connect with us

தொழில்நுட்பம்

பெங்களூருவில் விப்ரோ – இந்திய அறிவியல் கழகம் இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்: வீடியோ

Published

on

Diya xx

Loading

பெங்களூருவில் விப்ரோ – இந்திய அறிவியல் கழகம் இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்: வீடியோ

விப்ரோ (Wipro), இந்திய அறிவியல் கழகம் (IISc), மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கிய விரின் (WIRIN) (Wipro-IISc Research and Innovation Network) என்ற ஓட்டுநர் இல்லாத கார் சமீபத்தில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த காருக்குள் உத்தரதி மடத்தின் ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிகள் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகி உள்ளது. ஆதர்ஷ் ஹெக்டே (@adarshahgd) என்பவர் பதிவிட்ட அந்த வீடியோவில், முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்த கார், கல்லூரி வளாகத்தில் சீராகச் செல்லும்போது, அந்தத் துறவி சௌகரியமாக அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.இந்த முன்மாதிரி கார் அக்டோபர் 27-ம் தேதி ஆர்.வி. பொறியியல் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக மணி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.“விப்ரோவின் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் ரோபாட்டிக்ஸ் பிரிவின் உலகளாவிய தலைவரான ராமச்சந்திர புத்திஹால், ராஷ்ட்ரீய சிக்ஷனா சமிதி அறக்கட்டளையின் (ஆர்.எஸ்.எஸ்.டி) தலைவரான எம்.பி. ஷியாம் மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரியின் முதல்வரான கே.என். சுப்ரமணியா ஆகியோர் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினர். இந்த கண்டுபிடிப்பு மற்றும் கூட்டு முயற்சிக்கு, ஆர்.வி. பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்களான உத்தர குமாரி மற்றும் ராஜா வித்யா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு 6 வருடங்கள் உழைத்து இந்த உள்நாட்டுத் தானாக இயங்கும் காரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது” என்று மனி கண்ட்ரோல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.வீடியோவைப் பாருங்கள்:Sri Sri Satyatmateertha Swamiji of Uttaradimath travelling in Driverless Car At RV College.Projected Funded by Wipro Engineering,Jointly Developed By Wipro,IISc & RV College Of Engineering Bengaluru…🙂👌👏Superb Technology. 🤘@anandmahindra@elonmusk@nikhilkamathcio . pic.twitter.com/m3khFWgEQUஇந்தத் திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகிறது, இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் சில மாதங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓட்டுநர் இல்லாத கார் தயாரானதும், அது சீராகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதை உறுதி செய்வதற்காக, இந்தியச் சாலைகளின் நிலைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தற்போது வரைபடம் தயாரித்து ஆய்வு செய்து வருவதாகப் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியச் சாலைகளில் உள்ள பள்ளங்கள், விலங்குகள் மற்றும் பிற நிஜ உலகச் சூழல்களைக் கணக்கில் கொண்டு, 2019-ஆம் ஆண்டிலேயே ஐ.ஐ.எஸ்.சி-யும் விப்ரோவும் இணைந்து ஓட்டுநர் இல்லாத காரை உருவாக்கும் பணியைத் தொடங்கின. விரின் (WIRIN) திட்டத்தின் கீழ், அவர்கள் தன்னாட்சி அமைப்புகள் (Autonomous systems), ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), எந்திர வழி கற்றல், காட்சி கணினியியல் (Visual computing) மற்றும் 5ஜி அடிப்படையிலான வாகனங்களுக்கான தகவல் தொடர்பு (V2X) ஆகியவற்றில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.இந்தக் கூட்டு ஒத்துழைப்பு, விப்ரோவின் தன்னாட்சி அமைப்புகள் குறித்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. இது சிமுலேட்டர்கள் மற்றும் அறிவாற்றல் வழிசெலுத்தல் திறன் கொண்ட புத்திசாலித்தனமான வாகனங்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஐ.ஐ.எஸ்.சி-யின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புத் திறன்களையும் மேம்படுத்துகிறது.செப்டம்பர் மாதம், எம்.ஜி. மோட்டார் இந்தியா (MG Motor India) பெங்களூருவில் உள்ள ஆர்.வி. பொறியியல் கல்லூரியுடன் இணைந்து தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கவும், எதிர்காலத்திற்காக மாணவர்களைத் தயார்படுத்தவும் கூட்டு வைத்தது. எம்.ஜி.யின் ஆதரவுடன் புதிதாகத் திறக்கப்பட்ட சிறப்பு மையத்தில் நடத்தப்படும் மின்னணு வாகனச் சான்றிதழ் திட்டத்தை எம்.ஜி. நர்ச்சர் திட்டத்தின் கீழ் நிறுவனம் தொடங்கியது. மேலும், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நிலைநாட்டும் விதமாக, இந்தச் சான்றிதழ் படிப்புக்குத் தகுதியுள்ள பெண் வேட்பாளர்களுக்கு 100% உதவித்தொகை வழங்குவதாகவும் எம்.ஜி. அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன