இலங்கை
பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு: ஹெரோய்னுடன் மூன்று பேர் கைது!
பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு: ஹெரோய்னுடன் மூன்று பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஹெரோய்னுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கொக்குவில், பொற்பதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்து 2 கிராம் ஹெரோய்னும், கொக்குவில் மற்றும் பொற்பதி பகுதிகளைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து சிறிதளவு ஹெரோய்னும் மீட்கப்பட்டன. சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
