இலங்கை
மீனவர்களுக்கு உயர்தர எரிபொருள்!
மீனவர்களுக்கு உயர்தர எரிபொருள்!
கடற்றொழிலாளர்களுக்கு, உயர்தரத்திலான எரிபொருளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் சமூகத்துக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைப்பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இலங்கைக் கடற்றொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து நேற்று ஆரம்பித்து வைத்தனர்.
