Connect with us

இலங்கை

யாழில் மகனின் பப்ஜி மோகத்தால் காணி விற்று கடன் கட்டிய பெற்றோர்; பறிபோன உயிர்

Published

on

Loading

யாழில் மகனின் பப்ஜி மோகத்தால் காணி விற்று கடன் கட்டிய பெற்றோர்; பறிபோன உயிர்

  யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் ஏற்கனவே விளையாட்டுக்காக பெருமளவான கடன் பெற்ற நிலையில் , காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.

அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.

இதனையடுத்து தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன