இலங்கை
196 கிலோ கேரளக் கஞ்சாவுடன் முன்னாள் சார்ஜென்ட் கைது
196 கிலோ கேரளக் கஞ்சாவுடன் முன்னாள் சார்ஜென்ட் கைது
தொம்பே, நாகஹதெனிய, பலுகமப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் நடத்திய சிறப்புச்சோதனை நட வடிக்கையில், 196 கிலோ 218 கிராம் கேரளக் கஞ்சாவுடன் விமானப்படையின் முன்னாள் பைலட் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொம்பேப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், இலங்கை விமானப்படைத்தளத்தில் பைலட் சார்ஜென்டாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
