விளையாட்டு
IND-W vs AUS-W LIVE Score: 339 ரன்கள் இலக்கு: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம்… வெற்றி பெறுமா இந்திய அணி!
IND-W vs AUS-W LIVE Score: 339 ரன்கள் இலக்கு: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம்… வெற்றி பெறுமா இந்திய அணி!
India vs Australia Live Score, ICC Women’s World Cup: 13-வது ஐ.சி.சி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முறையே முதல்நாள் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்தன. இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின. அரையிறுதி போட்டி நேற்று தொடங்கியது. கவுகாத்தியில் மாலை 3 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – தென்ஆப்ரிக்க அணிகள் மோதின.மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா விளையாடி வருகிறது. நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இந்த வாழ்வா-சாவா போட்டியில், இந்திய அணி முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலிய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 339 ரன்கள் என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்தி வாசிக்க இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 2 பேரும் அவுட் ஆன நிலையில், அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரும் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகின்றனர். இந்திய அணி 9.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தபோது, 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா, கிம் கார்த் பந்தில் அலிஸ்ஸா ஹீலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் செய்ய வந்தார்.339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வெர்மா – ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். 1.3 ஓவர்களில் ஷஃபாலி வெர்மா 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில், கிம் கார்த் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை 2-வது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 338 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், கடைசி கட்டத்தில் ஆஷ்லே கார்ட்னரின் (Ashleigh Gardner) அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களைத் தாண்டியது. ஆஸ்திரேலியாவின் வலுவான இலக்குக்கு வித்திட்ட கார்ட்னர், வெறும் 41 பந்துகளில் மின்னல் வேகத்தில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அவர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும். தீப்தி சர்மா வீசிய 48-வது ஓவரிலும் கார்ட்னர் ஒரு பவுண்டரியை விளாசியதன் மூலம், அந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 49 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 316/7 என்ற வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் 2 முக்கிய விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்ததால், ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் ஆணிவேராக நின்று ஆடிய எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry), 77 ரன்கள் எடுத்த நிலையில் ராதா யாதவ் (Radha Yadav) பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெர்ரி வெளியேறிய சில நொடிகளிலேயே, அடுத்த பேட்ஸ்மேனான ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) ரன் அவுட் ஆனார். இது ஆஸ்திரேலியாவின் மேலும் ஒரு பெரிய பின்னடைவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது விக்கெட்டை இழந்தது.இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் (Radha Yadav), ஆஸ்திரேலிய அணியின் ஆணிவேராக இருந்த எல்லிஸ் பெர்ரியின் (Ellyse Perry) விக்கெட்டை வீழ்த்தி, போட்டிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியை நிலைநிறுத்தி ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெர்ரி, 77 ரன்கள் எடுத்த நிலையில் ராதா யாதவிடம் ஆட்டமிழந்தார். ராதா யாதவ் வீசிய பந்தை, பெர்ரி லேட் கட் (Late Cut) ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து மிகவும் வேகமாகச் சென்று, பெர்ரியின் பேட்டில் படாமல், நேரடியாக ஆஃப்-ஸ்டம்பைத் தாக்கியது. 39.3 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 245/5 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி தனது துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முக்கிய விக்கெட்டைப் பெற்றுத் தந்துள்ளார். இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து விக்கெட் இழப்புகள் ஏற்பட்டு, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ சரணி தனது பந்துவீச்சை மீண்டும் தொடங்கி, இம்முறை அன்னபெல் சதர்லேண்டின் (Annabel Sutherland) விக்கெட்டை வீழ்த்தினார். வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சதர்லேண்ட், எளிதான ஒரு கேட்சை பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணியிடமே கொடுத்து ஆட்டமிழந்தார். 36 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 240/4 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீராங்கனையான பெத் மூனியின் (Beth Mooney) விக்கெட்டை வீழ்த்தி, ஸ்ரீ சரணி (Shree Charani) இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஆஸ்திரேலியா 220 ரன்களை எட்டியபோது, ஸ்ரீ சரணி வீசிய பந்தில் பெத் மூனி ஆட்டமிழந்தார். 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த மூனி, பந்தை ‘இன்சைட்-அவுட்’ ஷாட் ஆட முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் நேரம் தவறி அடிக்க, பந்து நேராக எக்ஸ்ட்ரா கவரில் நின்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) கைகளுக்குச் சென்றது. ஜெமிமா எளிதாக அந்த கேட்சைப் பிடித்தார்.ஆஸ்திரேலிய அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அரையிறுதியில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக் கனவை சிதைப்பாரா என அஞ்சப்பட்ட, ஃபோப் லிட்ச்ஃபீல்டின் அபார ஆட்டத்தை இந்திய வீராங்கனை அமன் ஜோத் கவுர் முடிவுக்குக் கொண்டுவந்தார். அமன்ஜோத் கவுர் வீசிய பந்தை, லிட்ச்ஃபீல்ட் ‘லேப் ஸ்வீப்’ ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து முழுவதுமாக மிஸ் ஆகி, நேராக நடு ஸ்டம்பை தகர்த்தது. இந்த ஆட்டமிழப்பு, லிட்ச்ஃபீல்ட்-எலிஸ் பெர்ரி (Ellyse Perry) இருவரும் சேர்ந்து அமைத்த 133 பந்துகளில் 155 ரன்கள் என்ற இமாலய பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. லிட்ச்ஃபீல்ட், தனது மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸை 93 பந்துகளில் 119 ரன்களுடன் முடித்துக் கொண்டார். 28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 188/2 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் இளம் வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (Phoebe Litchfield) சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. 28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 187/2 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 180 ரன்களில் அவுட் ஆனார்.3வது ஓவரில் ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலியின் கேட்ச்சை கோட்டைவிட்டார் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்!இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணிகள் டாஸ் வென்றது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தேர்வு, இந்தியா பவுலிங்க்கு தேர்வாகியுள்ளது.2012 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அஞ்சும் சோப்ரா தலைமையிலான இந்திய அணியை ஜோடி ஃபீல்ட்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னதாக முல்லன்பூரில் நடந்த இரண்டாவது மகளிர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தைதூர்தர்ஷன் மற்றும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்சேனல்நேரடி ஒளிபரப்பு செய்கிறது.ஒரு நாள் கிரிக்கெட்டில்இவ்விருஅணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளானமறுநாளில் நடைபெறும். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஸ்டேடியத்தில் பிற்பகல் 3 மணி முதல் தொடங்கி நடக்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா அதே உற்சாகத்துடன் களமாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை பார்க்கலாம். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் பஞ்சமில்லை. அரைஇறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளில் கவுகாத்தியில் நேற்று புதன்கிழமை நடந்த முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் மல்லுக்கட்டப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 2-வது அரைஇறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று வியாழக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய மண்ணில் பரபரப்பாக அரங்கேறி வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தத் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
