தொழில்நுட்பம்
குக்கிங் டூ கிளீனிங் வரை.. இனி வீட்டு வேலைகளைச் செய்ய ஆல்-இன்-ஒன் நியோ ரோபோ!
குக்கிங் டூ கிளீனிங் வரை.. இனி வீட்டு வேலைகளைச் செய்ய ஆல்-இன்-ஒன் நியோ ரோபோ!
தொழில்துறைக்குப் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் போதும்! இனி உங்க வீட்டுக்குள் வரப்போகிறான் நியோ (NEO) மனித உருவ ரோபோ. அமெரிக்க-நார்வேயைச் சேர்ந்த 1X டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது மிகவும் சவாலான தயாரிப்பான, மனித உருவ வீட்டு அசிஸ்டெண்ட் ரோபோவான நியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆய்வுக் கூடங்களை விட்டு, மனிதர்கள் வாழும் இடங்களுக்கு ரோபோக்களைக் கொண்டு செல்வதே இவர்களின் இலக்கு.வீட்டுச் சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நியோ ரோபோட்டின் சிறப்பம்சங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. பார்ப்பதற்கு நடுநிலை வண்ணங்களுடன், மென்மையான பின்னப்பட்ட உடை (soft knit suit) அணிந்து, மனிதர்களுடன் ‘அணுகுவதற்கும் வசதியாகவும்’ இருக்க வேண்டும் என்ற நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 30 கிலோ எடையுடன் இருந்தாலும், 68 கிலோவுக்கும் மேல் (150 பவுண்டுகள்) தூக்கும் திறன் கொண்டது. இது மிகக் குறைந்த ஒலியுடன் (22 dB நவீன ப்ரிட்ஜ்-ஐ விட அமைதியானது) இயங்குவதால், வீட்டில் எந்த இடையூறும் இருக்காது. மனிதர்களைச் சுற்றி மென்மையாகச் செயல்பட, 1X-ன் காப்புரிமை பெற்ற டெண்டன் டிரைவ் (Tendon Drive) அமைப்பைப் பயன்படுத்துகிறது. சமையலறைப் பணிகளுக்காக இதற்கு 22-டிகிரி-ப்ரீ கொண்ட கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கநியோ ரோபோவின் நுண்ணறிவுத் திறன்கள் மிகவும் மேம்பட்டவை. உள்ளமைக்கப்பட்ட மொழி மாதிரி (LLM) மூலம் இது இயங்குகிறது. இதனால் பயனர்களுடன் இயல்பான உரையாடலை மேற்கொள்ள முடியும். இதன் ஆடியோ மற்றும் விசுவல் (Visual) நுண்ணறிவு, தன்னுடன் யார் பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதுடன், சுற்றியுள்ள சூழலையும் புரிந்துகொள்ளும்.நியோவுக்கு நினைவகச் செயல்பாடு (Memory functionality) உள்ளது. இது முந்தைய உரையாடல்களை நினைவில் வைத்து, காலப்போக்கில் உங்களுக்குத் தேவையான உதவிகளைத் தனிப்பயனாக்கி வழங்க முடியும். நீங்க சமையலறை மேடையில் உள்ள பொருட்களை (வெங்காயம், தக்காளி போன்றவை) வைத்தால், அவற்றை அடையாளம் கண்டு, அவற்றைக் கொண்டு என்னென்ன சமையல் செய்யலாம் என்று ஆலோசனை கூறும் திறன் இதற்கு உள்ளது.நியோ ரோபோ தற்போது முன்பதிவுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கால வாடிக்கையாளர்களுக்கு இதன் விலை $20,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17.6 லட்சம்). மாதம் $499 செலுத்திச் சந்தா முறையிலும் பெறலாம். அமெரிக்காவில் 2026-ம் ஆண்டிலும், மற்ற உலகச் சந்தைகளில் 2027 ஆம் ஆண்டிலும் இதன் விநியோகம் தொடங்கும்.பரிசோதனைக் கூடத்தில் இருந்து வீட்டுக்குள் ரோபோ வருவதால், மனித பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் மின் மேலாண்மை போன்ற சவால்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில், இந்த ரோபோ ஆட்டோமெட்டிக் செயல்படுவதை விட, மனித ஊழியர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படும் உதவியாளராகவே செயல்பட வாய்ப்புள்ளது.ஆயினும், அடுத்த பத்தாண்டுகளில் மனித உருவ ரோபோடிக்ஸ் துறை பல 100 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வேலைகளை எளிமையாக்கி, நமக்கு நேரத்தைக் கொடுக்கப்போகும் இந்தப் புதிய தொழில்நுட்ப வருகை ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
