இலங்கை
குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் வெளிநாடுகளில் பதுங்கமுடியாது;
குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் வெளிநாடுகளில் பதுங்கமுடியாது;
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டம்.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டு வந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; 216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாளக் குழுவை சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாளக் குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாளக் குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். பாதா ளக் குழுவைச் சேர்ந்தவர்களில் அதிக ளவானோர் டுபாயிலேயே இருக்கின்ற னர். சிலர் வெளிநாட்டுச் சிறைகளில் உள்ளனர். இவர்களைக் கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டது போல எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும். நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது- என்றார்.
