உலகம்
தென் கொரியாவின் மிக உயரிய விருது ட்ரம்பிற்கு வழங்கிவைப்பு!
தென் கொரியாவின் மிக உயரிய விருது ட்ரம்பிற்கு வழங்கிவைப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தென்கொரியாவின் மிக உயரிய விருதான ‘Grand Order of Mugunghwa’ விருது தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்கால் வழங்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர நட்பின் அடையாளமாக, தென்கொரிய ஜனாதிபதி லீ ட்ரம்பிற்கு ஒரு பண்டைய கொரிய கிரீடத்தின் பிரதியையும் வழங்கினார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக இந்த விருது முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விருது கொரிய நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும்.
இந்த விருதுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்த ட்ரம்ப், இதை ஒரு பெரிய மரியாதை என்று கூறி, “அழகானது” என்றும் கூறினார், மேலும் “இதை இப்போதே அணிய விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
