இலங்கை
பீதியில் உருவாகியதே எதிரணிகள் கூட்டணி; சவால் இல்லை என்கிறது அரசாங்கம்!
பீதியில் உருவாகியதே எதிரணிகள் கூட்டணி; சவால் இல்லை என்கிறது அரசாங்கம்!
எதிரணிக் கூட்டணியால் அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் இல்லை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வழக்குத் தொடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல அரசியல்வாதிகளின் சொத்துக்குவிப்புப் பற்றியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதனால் சில எதிரணி உறுப்பினர்கள் பீதியடைந்துள்ளனர். ஒன்றுசேர்வதற்குரிய உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் ஒன்றுகூடலாம். அந்தச் சுதந்திரத்தையும் பயன்படுத்தலாம் என்றார். கருத்து வெளியிடும் சுதந்திரமும் உள்ளது.
