இலங்கை
வெல்லவாய நீதவான் இடைநீக்கம்
வெல்லவாய நீதவான் இடைநீக்கம்
வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடைத் தொடர்ந்து நீதித்துறை சேவை ஆணைக்குழு இந்த இடைநீக்கத்தை விதித்துள்ளது.
அவரது பல வழக்கு முடிவுகள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் தலைமை நீதிபதிக்கு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக நீதித்துறை சேவை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் விளைவாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதன்படி நேற்று (30) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
