சினிமா
அழகு ராணி மீண்டும் கலக்கல்.. புதிய போட்டோஷூட்டால் ரசிகர்களை மயக்கிய ஐஸ்வர்யா ராய்.!
அழகு ராணி மீண்டும் கலக்கல்.. புதிய போட்டோஷூட்டால் ரசிகர்களை மயக்கிய ஐஸ்வர்யா ராய்.!
பாலிவுட் திரையுலகில் அழகின் சின்னமாக திகழும் ஐஸ்வர்யா ராய் பச்சன், மீண்டும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் எடுத்திருந்த புதிய போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. “ஐஸ்வர்யா இன்னும் இவ்வளவு யங்காக இருக்கிறாரா?” என்ற ஆச்சரியக் குரல்களும் ரசிகர்களிடையே ஒலிக்கின்றன.1994-ல் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்று உலகம் முழுவதும் புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி என பல மொழிகளில் சிறந்த படங்களில் நடித்துள்ளார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007-இல் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கின்றார். இந்நிலையில், தற்பொழுது வெளியான புதிய போட்டோஷூட்டில், ஐஸ்வர்யா ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலிஷாக காட்சியளிக்கின்றார். இன்ஸ்டாகிராமில் அந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இந்த போட்டோஷ் சிறிது நேரத்திலேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.
