தொழில்நுட்பம்
ரூ.89,900 போனுக்கு ரூ.25,000 தள்ளுபடி… ஆப்பிள் ஐபோன் 16 வாங்க சரியான நேரம்!
ரூ.89,900 போனுக்கு ரூ.25,000 தள்ளுபடி… ஆப்பிள் ஐபோன் 16 வாங்க சரியான நேரம்!
ஆப்பிள் நிறுவனத்தின் விடுமுறைக்கால விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு, ஜியோமார்ட் (JioMart) மிக கவர்ச்சிகரமான சலுகையை வெளியிட்டுள்ளது. முதலில் ரூ.89,900 என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), இப்போது ஜியோமார்ட்டில் ரூ.65,990-க்குக் கிடைக்கிறது. இது சில்லறை விலையில் இருந்து நேரடியாக ரூ.23,910 குறைப்பு ஆகும். பிரத்யேக வங்கி ஆபர் மற்றும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் போனஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் இதன் நிகர விலை ரூ. 64,990 அல்லது அதற்கும் குறைவாகக் குறைய வாய்ப்புள்ளது. இது இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஐபோன் சலுகைகளில் ஒன்றாகும்.ஜியோமார்ட்டின் சமீபத்திய பட்டியலில், ஐபோன் 16 பிளஸ் 128 GB மாடல் ரூ.65,990-க்கு கிடைக்கிறது. எஸ்.பி.ஐ. பிராண்டட் பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இ.எம்.ஐ. பரிவர்த்தனைகள் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% கேஷ்பேக் (அதிகபட்சம் ரூ. 1,000) கிடைக்கும். இதனால் விலை ரூ.64,990 ஆக குறைகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து அதன் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்து கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். ஐபோன் 17 வெளியானபோது, ஆப்பிள் நிறுவனம் ஒட்டுமொத்த ஐபோன் 16 சீரிஸ் விலையையும் குறைத்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக திருத்தப்பட்ட ரூ.79,900 என்ற விலையிலிருந்து ஜியோமார்ட் சேல் குறிப்பிடத்தக்க அளவில் விலையைக் குறைத்துள்ளது.ஐபோன் 16 பிளஸ்-ன் சிறப்பம்சங்கள் (Specs)ஸ்கிரீன்: 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே. இது செராமிக் ஷீல்ட் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.சிப்: ஆப்பிளின் A18 சிப், 6-கோர் சி.பி.யூ மற்றும் 5-கோர் GPU உடன் வருகிறது. இது iOS 18-ல் உள்ள Apple Intelligence (AI) அம்சங்களைக் கையாளும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இயந்திர கற்றல் பணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட 16-கோர் நியூராலி எஞ்சின் உள்ளது.கேமரா: டூயல் கேமரா அமைப்பு. இதில் OIS உடன் கூடிய 48-மெகாபிக்சல் மெயின் ஃபியூஷன் கேமரா, 2x ஆப்டிகல் தர டெலிஃபோட்டோ ஜூம், மற்றும் மேக்ரோ ஃபோட்டோகிராபி மற்றும் மேம்பட்ட குறைந்த வெளிச்சப் படப்பிடிப்பை ஆதரிக்கும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை அடங்கும்.புதிய அம்சம்: ஜூம் மற்றும் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு உடனடியாக அணுகுவதற்காக ஒரு புதிய கேமரா கண்ட்ரோல் பட்டன் (Camera Control button) கொடுக்கப்பட்டுள்ளது.பேட்டரி: இந்த சாதனம் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.வடிவமைப்பு: அலுமினிய ஃபிரேம், IP68 நீர் மற்றும் தூசு எதிர்ப்புத் திறன் கொண்டது.வண்ணங்கள்: கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, டீல் மற்றும் அல்ட்ராமெரைன் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.சேமிப்பு: 128GB முதல் 512GB வரையிலான ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன.
