Connect with us

தொழில்நுட்பம்

60 லட்ச ஆண்டுகள் பழமையான பனி கண்டுபிடிப்பு: அண்டார்டிகாவின் பண்டைய காலநிலை ரகசியம்!

Published

on

Oldest ice ever found

Loading

60 லட்ச ஆண்டுகள் பழமையான பனி கண்டுபிடிப்பு: அண்டார்டிகாவின் பண்டைய காலநிலை ரகசியம்!

உறைபனிப் பெருங்கண்டத்தின் தெற்கு விளிம்பில், விஞ்ஞானிகள் புவியின் வரலாற்றிலேயே மிக ஆழமான, அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். அது சாதாரணப் பனிக்கட்டி அல்ல; 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புவி எப்படி இருந்தது என்பதற்கான “உறைந்துபோன புகைப்படம்” (Frozen Snapshot). அமெரிக்க விஞ்ஞானிகள் குழு, ஈஸ்ட் அண்டார்டிகாவில் உள்ள ஆலன் ஹில்ஸ் (Allan Hills) என்ற இடத்தில், இதுவரை கண்டெடுக்கப்படாத மிகப்பழமையான பனிக்கட்டி மற்றும் அதனுள் சிக்கிய காற்றை மீட்டெடுத்துள்ளனர்.பொதுவாக, விஞ்ஞானிகள் பனிக்கட்டியை எடுக்க, 2 கி.மீ. (6,500 அடி) அதிக ஆழத்தில் துளையிட்டு, தொடர்ச்சியான காலவரிசையை உருவாக்குவார்கள். ஆனால், ஹூஸ் ஹோல் ஓசியனோகிராஃபிக் நிறுவனத்தைச் சேர்ந்த சாரா ஷாகில்டன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் ஹிக்கின்ஸ் தலைமையிலான குழு முற்றிலும் புதிய உத்தியைக் கையாண்டது. பனிக்கட்டிகள் என்பது, விஞ்ஞானிகள் நம் கிரகம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்று பார்க்க உதவும் ‘காலப் பயண இயந்திரங்கள்’ போன்றவை.அவர்கள், மலைகளின் விளிம்பில், பனிப் பாய்ச்சல் காரணமாக மேற்பரப்புக்கு அருகில் வந்துள்ள பழமையான பனிக்கட்டிகளின் துண்டுகளை, 100 முதல் 200 மீ. ஆழத்திலேயே சேகரித்தனர். இது ஒரு ஆழமான சுரங்கம் தோண்டுவதற்குப் பதிலாக, மேற்பரப்பில் உள்ள பொக்கிஷங்களை வேட்டையாடுவது போன்றதாகும்.இந்த 60 லட்சம் ஆண்டுகள் பழமையான பனி மாதிரிகள், புவியின் வரலாற்றில் நாம் இதுவரை அறியாத காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அந்தக் காலகட்டத்தில் புவியின் தட்பவெப்பநிலை இன்று இருப்பதைவிட மிகவும் வெப்பமாகவும், கடல் மட்டங்கள் மிக அதிகமாகவும் இருந்தன. ஒவ்வொரு பனித் துணுக்கும், அந்தக் ‘சூடான புவியின்’ காலநிலைக் காட்சியை (Climate Snapshot) உறைத்துப் பிடித்து வைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு முக்கிய உண்மையை உறுதிப்படுத்துகிறது: கடந்த 60 லட்சம் ஆண்டுகளில் அண்டார்டிகா கண்டம் படிப்படியாக சுமார் 12°C (22°F) குளிர்ந்துள்ளது. இதுவே, அந்தப் பிராந்தியத்தின் நீண்டகாலக் குளிர்ச்சியின் முதல் நேரடி அளவீடு ஆகும்.இந்த ஆய்வின் அதிமுக்கிய அம்சம், “நேரடித் தேதியிடல்” முறைதான். விஞ்ஞானிகள் பனிக்கட்டியில் சிக்கியுள்ள காற்று குமிழ்களுக்குள் உள்ள ஆர்கான் (Argon) எனப்படும் வாயுவின் ஐசோடோப் அளந்தே, பனியின் வயதை துல்லியமாக (60 லட்சம் ஆண்டுகள்) உறுதி செய்துள்ளனர். இது, வெளிப்புற ஆதாரங்களைச் சார்ந்து இல்லாமல், பனிக்கட்டி தானே தன் வயதைச் சொல்லும் அற்புதம் ஆகும்!இந்த அரிய பழமையான பனிக்கட்டிகளை, ஆலன் ஹில்ஸ் பகுதி ஏன் இவ்வளவு மேற்பரப்புக்கு அருகில் பாதுகாக்கிறது? காரணம் கடுமையான காற்று மற்றும் உறைபனிக் குளிர். அங்கு வீசும் பலத்த காற்று புதிதாகப் பெய்யும் பனியை அடித்துச் சென்றுவிடுவதால், பழமையான பனி மேற்பரப்பிலேயே பாதுகாக்கப்படுகிறது. மிகக் கடுமையான குளிர், பனியின் இயக்கத்தை கிட்டத்தட்ட நிறுத்தி, லட்சக்கணக்கான ஆண்டுகளின் ரகசியங்களை அங்கு பூட்டி வைத்துள்ளது.இந்த 60 லட்சம் வருடப் பனியின் உள்ளே உறைந்திருக்கும் பண்டைய பசுமைக் குடில் வாயுக்கள் (Greenhouse Gases) மற்றும் கடல் வெப்பத்தின் அளவுகளை விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் தரவுகள், புவியின் பண்டைய காலநிலை எவ்வாறு இயங்கியது என்பதைப் புரிந்துகொள்ளவும், மனித செயல்பாடுகள் காரணமாக CO2 அளவு உயரும் இன்றைய காலகட்டத்தில், எதிர்காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரக்கூடும் மற்றும் அண்டார்டிகாவின் பனிப்போர்வை எவ்வளவு நிலையாக இருக்கும் என்பதற்கான துல்லியமான மாதிரிகளை உருவாக்கவும் உதவும்.அடுத்த கட்டமாக, 2026 முதல் 2031-க்குள் இந்தக் குழு மீண்டும் ஆலன் ஹில்ஸுக்குச் சென்று, இந்த 60 லட்சம் ஆண்டுகள் பழமையான சாதனை முறியடிக்கவும், இன்னும் ஆழமான ரகசியங்களைத் தோண்டவும் திட்டமிட்டுள்ளது. ஆலன் ஹில்ஸ் பனிக்கட்டிகள், தொடர்ச்சியான ஏட்டுச் சுவடி அல்ல; ஆனால், அவை நாம் இதுவரை இல்லாத ‘புவியின் ஆழமான கடந்த காலத்தின்’ பக்கங்கள். ஒவ்வொன்றும், நம்முடைய காலநிலை மாதிரிகளைச் சோதிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன