டி.வி
Fj பற்றிய திடுக்கிடும் உண்மைகளை உடைத்த ஆதிரை.. இதுதான் நடந்ததா.?
Fj பற்றிய திடுக்கிடும் உண்மைகளை உடைத்த ஆதிரை.. இதுதான் நடந்ததா.?
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட ஆதிரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். அவரது வெளியேறலின் பின்னணி, நிகழ்ச்சியின் கடைசி கட்டங்களில் ஏற்பட்ட திருப்பங்கள் என்பவற்றை தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் போட்டியாளர்களிடையேயான உறவுகள், மன அழுத்தங்கள், சண்டைகள் ஆகியவை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கின்றன. ஆதிரை வெளியேறிய பின்னர் வெளியிட்ட பேட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மை நிலைகள் பற்றி ரசிகர்களுக்கு வெளிச்சம் காட்டியுள்ளது.சமீபத்தில் அவர் ஒரு ஊடக பேட்டியில் கலந்து கொண்டு, தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேட்டியின் போது, “இன்னும் கொஞ்ச நாள் பிக்பாஸில இருந்திருக்கலாம் என்று தோணுச்சு.. நான் வெளியில வாறதுக்கு பதிலா கலையரசன் வெளியில வந்திருக்கலாம் என்று தான் இருக்கு..” என்றார்.மேலும் அவர் Fj குறித்தும் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதன்போது, ” Fj என்கிட்ட அன்பா இருந்தத ஒளிபரப்பு செய்யல! ஒருத்தன் ஒண்ணுமே பண்ணாம அவன் பின்னாடி சுத்துவாங்களா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதுமட்டுமல்லாது, நான் வெளியேறியதற்கு 2ம் வாரத்தில் தனக்கு வந்த தடுமாற்றம் தான் காரணம் எனவும் தெரிவித்தார். ஆதிரையின் இந்த உரை, நிகழ்ச்சியின் நேரடி அனுபவங்களை மட்டும் அல்லாமல், வீட்டில் போட்டியாளர்களின் நடத்தை வெளியில் எப்படி காட்டப்படுகின்றது என்பது பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது.
