Connect with us

டி.வி

எல்லாம் அனுபவிக்க ஹெல்த் வேணும், என் உடல்நிலை மோசமா இருக்கு: பிரபல சீரியல் நடிகை உருக்கம்!

Published

on

Rithu

Loading

எல்லாம் அனுபவிக்க ஹெல்த் வேணும், என் உடல்நிலை மோசமா இருக்கு: பிரபல சீரியல் நடிகை உருக்கம்!

இன்றைய காலக்கட்டத்தில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகும் புதிய நடிகர் நடிகைகள் பெரும்பாலும் சமூகவலைதளங்கள் மூலமாகவே வாய்ப்பு பெறுகின்றனர். திறமை இருக்கிறவர்கள் மேலே சென்றுவிடுகிறார்கள். திறமை இல்லாதவர்கள் ஒருசில எபிசோட்டுடன் மீண்டும் சமூகவலைதளத்தின் பக்கம் சென்றுவிடுகிறார்கள். அந்த வகையில் சமூகவலைதளங்களின் மூலம் வந்தவர் தான் நடிகை சாய் ரித்து.143, காதல் வைத்து காத்திருந்தேன் போன்ற வெப் தொடர்களில் நடித்தன் மூலம் பிரபலமான இவர் விஜய் டிவியின் முக்கிய சீரியல்களான முத்தழகு, தங்கமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழுதபடி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.அதில், நீங்கள் தொடர்ந்து என்னுடைய இன்ஸ்டாகிராமை பார்த்து இருப்பீர்கள், உங்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும், இப்போது என்னுடைய உடல்நிலை சரியில்லை. இது எப்போது சரியாகும் என்று எனக்கு தெரியவில்லை. யாருக்கு என்ன சொல்வதும் என்றும் எனக்கு தெரியவில்லை. எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். இதனால், இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டு இருக்கிறேன். ஆனால், சோசியல் மீடியாவில் இப்படி பேசுவது சரியா, தவறா, என்று எனக்கு தெரியவில்லை. கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும், வாழ்க்கையில் எல்லாம் வேண்டும் என கேட்கிறோம். இது எல்லாத்தையும் அனுபவிக்க நல்ல வாழ்க்கை வேண்டும், நல்ல உடல் நலம் வேண்டும், நீங்கள் நன்றாக இருந்தால் தான் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்பதை இந்த 5 நாட்களில் நான் நன்றாக கற்றுக் கொண்டேன்.A post shared by Sai Rithu (@sai_rithu19)உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன், இந்தப் போரில் நான் நிச்சயமாகப் போராடுவேன். எனக்கு கொஞ்சம் தனிப்பட்ட இடம் தேவை, என் சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்று நடிகை சாய் ரித்து மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவருக்கு என்ன பிரச்னை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் தனக்கு என்ன நோய் என்பதை ரித்துவும் வீடியோவில் தெரிவிக்கவில்லை.  ஆனாலும் அவர் தனது வீடியோவில் உருக்கமாக பேசி இருப்பதை பார்த்தவர்கள், அவருக்கு ஏதோ கொடிய நோயால் பாதிப்பு இருக்கும் கூறி, அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என இணையத்தில் ஆறுதலான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன