இலங்கை
கலவானை துப்பாக்கிச் சூட்டின் துப்பாக்கிதாரி கைது
கலவானை துப்பாக்கிச் சூட்டின் துப்பாக்கிதாரி கைது
கலவானை, தெல்கொட பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இரண்டு பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர் கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கலவானை, கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலவானை, எலவெல்ல பகுதியில் உள்ள வீட்டொன்றின் சமையலறையில் அவர் மறைந்திருந்ததாக தெரிவித்த பொலிஸார், இதன்போது அவரிடம் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் மற்றும் கூர்மையான கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
