உலகம்
கென்யாவில் நிலச்சரிவு – 21 பேர் உயிரிழப்பு, 30 பேர் மாயம்!
கென்யாவில் நிலச்சரிவு – 21 பேர் உயிரிழப்பு, 30 பேர் மாயம்!
கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 30 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக நாட்டில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறைகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
கென்யாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
