Connect with us

பொழுதுபோக்கு

தந்தை பெயரில் ‘மாதம்பட்டி ரங்கராஜ்’: குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

Published

on

birth crtificate

Loading

தந்தை பெயரில் ‘மாதம்பட்டி ரங்கராஜ்’: குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா எழுப்பிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தனது மகனின் பிறப்புச் சான்றிதழை அவர் வெளியிட்டுள்ளது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.’மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படம், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மற்றும் தனது கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தச் சூழலில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகக் காவல்துறையில் புகார் அளித்தார். திருமணத்திற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ரங்கராஜின் வற்புறுத்தலால் பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை பொது வெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.இதனிடையே, ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தொழில் செய்ய முடியவில்லை. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனவே, எனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 பராமரிப்புச் செலவுத்தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், “மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்று பதிவிட்டிருந்தார். மேலும், குழந்தையின் புகைப்படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, (முகத்தை மறைத்து) “அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருக்கிறார்” (Carbon copy of his father’s face) என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது எக்ஸ் தளப் பதிவில், “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தற்போது தனது மகனின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டுள்ளார். அதில், தந்தையின் பெயர் (Father’s Name) என்ற இடத்தில் ‘மாதம்பட்டி ரங்கராஜ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பதிவில், “சில பொறுப்புகள் வலிக்காக வழங்கப்படுகின்றன. பெருமைக்காக அல்ல” (Some responsibilities are given for pain. Not for pride) என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்தச் சம்பவம் மீண்டும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன