உலகம்
பிரித்தானியாவிலுள்ள இலங்கை மருத்துவர்களை நாடு திரும்ப சுகாதார அமைச்சர் கோரிக்கை!
பிரித்தானியாவிலுள்ள இலங்கை மருத்துவர்களை நாடு திரும்ப சுகாதார அமைச்சர் கோரிக்கை!
நாட்டில் உள்ள விசேட மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை மருத்துவர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் மேற்கொண்ட பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமூக வலைத்தள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இலங்கைக்குத் திரும்பிப் பணியாற்றினால், அவர்களின் அனைத்து முந்தைய சேவைப் பலன்களுடன் சேர்த்து அதே பதவிகளில் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
