இலங்கை
மதுபானசாலைகளில் திடீர் சோதனை ; அதிரடி சோதனையில் வெளியான அம்பலம்
மதுபானசாலைகளில் திடீர் சோதனை ; அதிரடி சோதனையில் வெளியான அம்பலம்
இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானங்கள் கலப்படம் செய்து விற்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அறியமுடிகிறது.
விலை உயர்ந்த மதுபான போத்தல்களில் மலிவான மதுபானம் மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவ்வாறான மதுபானசாலைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
