சினிமா
ரங்கராஜுக்கு அந்த தகுதியே இல்ல..! மீண்டும் அட்டாக் செய்த ஜாய்
ரங்கராஜுக்கு அந்த தகுதியே இல்ல..! மீண்டும் அட்டாக் செய்த ஜாய்
மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டாவுக்கு நேற்று முன் தினம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கைகளை புகைப்படம் எடுத்து, அதை “ரங்கராஜின் கார்பன் காப்பி” என்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஜாய்.ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜை திருமணம் செய்துகொண்ட பிறகு அவரால் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்தார். மேலும், அவரின் வற்புறுத்தலின் காரணமாக கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்க 6.50 லட்சம் ரூபாய் பராமரிப்புக்கான மனு தாக்கல் செய்தார் ஜாய்.இதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு பதிலும் வழங்கவில்லை. எனினும் இந்த பூமிக்கு வந்திருக்கும் அந்த பிஞ்சுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் , புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஜாய். அதில் தனது மகனுக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றிருக்கும் அவர், தந்தை ரங்கராஜ் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அப்புகைப்படத்தோடு, ‘உங்களுக்கு இதற்கு தகுதியே இல்லை. ஆனாலும் வலியோடு இந்த பெருமையை உங்களுக்கு கொடுக்கிறேன்’ என வேதனையான கேப்ஷனை போட்டிருக்கிறார்.
