Connect with us

பொழுதுபோக்கு

OTT: ரத்தம் சொட்டச் சொட்ட… தெறிக்க விடும் திகில் காட்சிகள்; இரவில் பார்க்க பெஸ்ட் படங்கள்!

Published

on

bring

Loading

OTT: ரத்தம் சொட்டச் சொட்ட… தெறிக்க விடும் திகில் காட்சிகள்; இரவில் பார்க்க பெஸ்ட் படங்கள்!

பெரும்பாலான சினிமா ரசிகர்கள் த்ரில்லர் மற்றும் திகில் படங்கள் பார்க்கத் தான் விரும்புவார்கள். அதிலும் இரவு நேரத்தில் படம் பார்க்கத் தான் அதிகம் விரும்புவார்கள். அப்படி இரவில் பார்க்கக் கூடிய பெஸ்ட் திகில் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சின்னர்ஸ்நடப்பாண்டில் “பிளாக் பாந்தர்” பட இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சின்னர்ஸ்’ (Sinners). தரமான ஹாரர் திரைப்படமாக உருவான இந்த படத்தில் மைக்கேல் பி நடித்திருந்தார். தரமான ஹாரர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை  ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து மகிழுங்கள்.ஃபைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ்உலக பிரபலமான திகில் திரைப்படம் ’ஃபைனல் டெஸ்டினேஷன்’ (Final Destination). இப்படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனாக ஃபைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ்’ (Final Destination: Bloodlines) திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. தியேட்டரில் ஹிட்டானதை தொடர்ந்து ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் ரிலீஸாகியுள்ளது.பிரிங் ஹர் பேக்’பிரிங் ஹர் பேக்’ (Bring her back) திரைப்படம் நடப்பாண்டில் வெளியான ஆஸ்திரேலிய அமானுஷ்ய திகில் திரைப்படமாகும்.  டேனி மற்றும் மைக்கேல் பிலிப்போ ஆகியோரால் இயக்கப்பட்ட இந்த  படத்தில் சாலி ஹாக்கின்ஸ், பில்லி பாராட் மற்றும் சோரா வோங் ஆகியோர் நடித்துள்ளனர்.  சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படமான ‘பிரிங் ஹெர் பேக்’ திரைப்படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்க்கலாம்.28 இயர்ஸ் லேட்டர்சயின்ஸ் பிக்ஷன், ஜாம்பி, ஹாரர், திரில்லர் திரைப்படம் ‘28 இயர்ஸ் லேட்டர்’  (28 Years Later). இப்படம் நெட்பிளிக்ஸ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ஸ்ட்ரீமாகி வருகிறது.வெப்பன்ஸ்சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி, டார்க் காமெடி திரைப்படமாக வெளியானது ‘வெப்பன்ஸ்’  (Weapons). சாக் கிரெக்கர் இயக்கிய இந்த படம் ஒரே வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். அவர்கள் எப்படி காணாமல் போகின்றனர் என்பது குறித்து கதைக்களம் நகரும். இந்த படத்தை  அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன