Connect with us

சினிமா

இந்த வாரம் ஓடிடிக்கு ஒன்னா இறங்கவுள்ள 12 படங்கள்.. லிஸ்ட் இதோ..

Published

on

Loading

இந்த வாரம் ஓடிடிக்கு ஒன்னா இறங்கவுள்ள 12 படங்கள்.. லிஸ்ட் இதோ..

இந்த வாரம் முக்கிய ஓடிடி தளங்களில் (Jio Hotstar, Netflix, Zee5, SonyLIV, Lionsgate Play, Aha) மொத்தம் 12 புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அந்த வகையில் ஆக்ஷன், ஹாரர், அரசியல் டிராமா மற்றும் ஃபேண்டசி வகைகளில் பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு காத்திருக்கிறது.நெட்பிளிக்ஸ் வெளியீடுகள்:ஃபிராங்கண்ஸ்டைன் என்ற படத்தில் ஆஸ்கர் ஐசக் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.  ஹாரர் டிராமா ஜானரில் உருவான இந்த படம், மனித உடல்களால் உயிரினம் உருவாக்கும் விஞ்ஞானி விக்டர் பிரான்ஸ்டீனின் பரிசோதனை மற்றும் அதன் தீய விளைவுகள் பற்றிய கதையாக அமைந்துள்ளது. தி பேட் கைஸ்: பிரேக்கிங் இன் என்ற படம் பிரபலமான அனிமேஷன் படத்தின் ப்ரீக்வெல். குற்றவியல் குழுவின் தொடக்கம் பற்றிய சுவாரஸ்யமான சீரீஸ் ஆகும். இது  நவம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது.பாரமுல்லா என்ற படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் காஷ்மீரை மையமாகக் கொண்ட மர்ம த்ரில்லர்.ஜியோ ஹாட்ஸ்டார்பென்டாஸ்டிக் போர் என்ற படம் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் சூப்பர் ஹீரோக்களின் உலகைக் காப்பாற்றும் படம். மேலும் சில்வர் சர்ஃபர் தோற்றத்துடன் கலக்டஸ் பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழலில், தியாகம் மற்றும் குடும்ப பாசத்துடன் உலகை காப்பாற்றும் கதையாக வரவுள்ளது.ஆல் ஹெர் பால்ட் என்ற படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இது அயர்லாந்தை மையமாகக் கொண்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாகும்.ஜீ5தோட் டோர் தோட் பாஸ்  என்ற படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இது மெத்தா குடும்பத்தின் உறவுகள் தொழில்நுட்ப வாழ்க்கையால் தூரமாகிவிட்டதை மீண்டும் இணைக்கும் குடும்ப டிராமாகிஸ்  கவின் நடித்த காதல் கதை படம். இந்த படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.ஆஹாஎட்டர்னல் என்ற படம் நவம்பர் 7தேதி வெளியாக உள்ளது. ராஜ் தருன் நடித்துள்ள பாண்டசி ஆக்ஷன் டிராமா இதுவாகும். ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா ஒரு விபத்தில் அதிசய சக்தி பெற, அதனால் வாழ்க்கை முழுவதும் மாறுகிறது.லயன்ஸ்கேட் ப்ளேதி ஹாக் என்ற படம் நவம்பர் 7தேதி வெளியாக உள்ளது. இது 2002–2012 இல் நடந்த பிரிட்டிஷ் மீடியா போன் ஹாக்கிங் சர்ச்சையை மையமாகக் கொண்ட சீரீஸ். சோனி லிவ்மஹாராணி சீசன் 4 –  நவம்பர் 7தேதி வெளியாக உள்ளதுஹூமா குரேஷி நடித்த அரசியல் டிராமா ஆகும். இது சிறையில் இருந்து வெளியே வந்த ராணி பாரதி மீண்டும் பீகார் அரசியலுக்குள் நுழையும் கதையை மையமாக கொண்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன