சினிமா
சூடுபிடித்த பிக் பாஸ் 9 ஷோ.. கிழித்தெடுத்த வைல்டு கார்டு போட்டியாளர்கள்!
சூடுபிடித்த பிக் பாஸ் 9 ஷோ.. கிழித்தெடுத்த வைல்டு கார்டு போட்டியாளர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களுக்குள் ஒரே சண்டை தான். தற்போது ஆட்டம் நன்றாக சூடு பிடிக்க வைல்ட் கார்டு என்ட்ரியாக 4 நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.சாண்ட்ரா ப்ரஜின் ஆகியோர் வீட்டுக்குள் போனதும் கிழி கிழி என கிழிக்கப்போவதாக கூறினார்கள்.அதே போல வீட்டில் எல்லா போட்டியாளர்கள் கையிலும் பேப்பர் கொடுத்து, எதற்காக பிக் பாஸ் வந்தீர்கள் என எழுத சொல்கிறார். அவர்கள் எழுதியதும், அதை படித்து பார்த்து, பார்வதி உள்ளிட்ட போட்டியாளர்களின் பேப்பரை கிழித்து வீசுகிறார்.
