சினிமா
நடிகை நயன்தாரா 50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்குகிறாரா?
நடிகை நயன்தாரா 50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்குகிறாரா?
கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமின்றி கதையின் நாயகியாக சோலோவாக இவர் பல ஹிட் படங்களை கொடுத்தார்.அடுத்ததாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இன்று உச்ச நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் வலம் நடிகை நயன்தாரா, ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், தென்னிந்திய சினிமாவில், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார்.திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், 50 வினாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
