Connect with us

இந்தியா

புதுச்சேரி பல்கலை. மாணவர் சஸ்பெண்ட்: பெரியார் இயக்கம் முற்றுகை போராட்டம்; தி.மு.க ஆதரவு

Published

on

Puducherry Periyar Thinker Movement Protest for Pondicherry University students suspended Tamil News

Loading

புதுச்சேரி பல்கலை. மாணவர் சஸ்பெண்ட்: பெரியார் இயக்கம் முற்றுகை போராட்டம்; தி.மு.க ஆதரவு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நாடகத் துறை மாணவன் புஷ்பராஜ் என்பவரை நான்கு மாதங்களாக தற்காலிக நீக்கம் செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.நாடகத் துறை மாணவர் புஷ்பராஜ் என்பவர் மீது பொய் வழக்கு பதியப்பட்டதால், பல்கலைக்கழகத்தின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். இக்கூடத்தில் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீர மோகன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி சரவணன் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் குழந்தைராஜ், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தலைவர்கள், மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் அமுதாகுமார், மாநில கழக மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக மாணவர் புஷ்பராஜை அழைத்து பல்கலைக்கழக நிர்வாகித்தனர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன