Connect with us

இலங்கை

பெளத்தர்கள் இல்லாத இடத்தில் எதற்கு புத்தர்? அமைச்சர் கேள்வி (வீடியோ இணைப்பு)

Published

on

Loading

பெளத்தர்கள் இல்லாத இடத்தில் எதற்கு புத்தர்? அமைச்சர் கேள்வி (வீடியோ இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் முன்னர் ஆளுநராக இருந்த அனுராதா ஜஹம்பத் அவர்கள் இருக்கின்ற காலத்தில் அந்த ஆளுனர் மக்களுக்கு சேவை செய்த செய்த காலத்தைவிட பிரச்சனைகளைத்தான் உருவாககி ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 

அந்த வரிசையில் தான் இந்த நெடியகல் மலை பகுதியிலும் அவருடைய நிர்வாகக் காலத்தில்தான் இந்த பௌத்தமத வழிபாட்டுத்தலம் ஒன்றை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தார் என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
பௌத்தமத மக்கள் வாழும் இடங்களில் பௌத்த வழிபாடு தலங்கள் அமைவது அது சாதாரண விடயம். இந்து மக்கள் வாழ்கின்ற பகுதியில் அவருடைய வழிபாட்டுத்தலங்களும், கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற வகையில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், அமைவது இயற்கையானது.

Advertisement

 அதை ஏற்றுக் கொள்ளக் கூடியது, நியாயமானது, ஆனால் எந்த ஒரு பௌத்த சிங்கள குடிமகனும் வாழ்ந்திராத இடத்தில் அந்த நெடிய கால்மலை எனும் இடத்தில் 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து வந்து பௌத்த துறவிகள் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 இது கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்திருந்தவர்கள் அவர்களுடைய காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த காரணத்தினால் அரசாங்கத்தின் சலுகைகளை பெறுகின்றார்கள் என்ற காரணத்தினாலும், இந்த விடயங்களை அவர்கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள்.
இப்போது இருக்கின்ற ஆட்சியில்கூட அதன் தொடர்ச்சி காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வனஇலாகாவுக்கு சொந்தமான அந்த பகுதியை குறித்த வன இலாகா பிரிவினர் உரிய இடத்தை பௌத்த வழிபாடு அமைப்பதற்குரிய அனுமதியை வழங்கி இருக்கின்றார்கள். 

இப்போது சர்வ சாதாரணமாக அங்கு இந்த பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அங்கு பௌத்த துறவிகள் வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. காலப்போக்கில் அவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் அனைத்தும் அமைக்கப்படும். பின்னர் அவர்களை பராமரிப்பதற்கும், சேவைசெய்வதற்குரிய சிங்கள மக்களை குடியேற்ற வேண்டிய தேவை ஏற்படும், அவற்றுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் அங்கு பாதுகாப்பும் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும், இராணுவ கட்டமைப்பு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே கிளக்கு மாகாணத்தை இவ்வாறு திட்டமிட்டு தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிப்பதற்கான ஒரு செயற்பாடாகதான் இந்த செயற்பாட்டை நாம் பார்க்க முடிகின்றது.
நல்லாட்சி, நல்லிணக்கம், சமரசம், போன்றவற்றையெல்லாம் சிந்திக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அதிகாரி பௌத்த இடிப்பாடுடனாக விடயங்களை அவ்விடத்தில் விதைத்துவிட்டு அங்கு பௌத்த வழிபாட்டுத்தலம் எப்போவோ இருந்திருக்கின்றது. என்பதை தாங்கள் அவ்விடத்தில் இட்ட சின்னங்களை வைத்துக் கொண்டு அடையாளப்படுத்தி இருப்பதாக ஒரு பௌத்த துறவி தெரிவித்திருந்தார். அதுபோல் கிழக்கிலும் புதிதாக பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. 

Advertisement

அதற்குரிய வீதியையும் வீதியை அபிவிருத்தித் திணைக்களம் அமைத்துக் கொண்டிருக்கின்றது. இவ்விடையம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
எனவே ஜனாதிபதியிடவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும், குறிப்பிட்ட மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வசிக்காத பிரதேசங்களில் அவர்கள் சாராத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது என்பது நல்லிணக்கம் அல்லது சமரசமான வாழ்வுக்கான சூழ்நிலை குழப்பப்படும் என தெரிவிக்கின்றேன்.
இதுபோன்றுதான் மைலத்தமடு, மாதவனை, போன்ற பிரதேசங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் வந்து ஆக்கிரமித்து அங்கு இருக்கின்ற தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் பெரும்பான்மையின மக்களால் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
கால்நடைகளை வளர்க்க முடியாமல் உள்ளார்கள், எனவே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக குறித்த பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்ற அந்த பௌத்த வழிபாட்டுத்தலத்தை உடன் நிறுத்தப்பட வேண்டும். அது நிறுத்தப்படாது விட்டால் அதுநல்லிணக்க அல்லது மகிழ்ச்சியாக வாழ்கின்ற ஒரு சூழலை குழப்பக் கூடியதாக இருக்கும்.

 என்பதை நான் அரசாங்கத்திற்கு செய்தியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் இந்த ஒரு மதத்திற்க்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ, எதிரானவர்கள் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற குடியேற்றங்கள் எல்லாம் இவ்வாறு நடைபெற்றிருக்கின்றது. கடந்த காலத்தில் அம்பாறையில் தீக வாவி எனப்படுகின்ற ஒரு இடத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். அது உண்மையிலேயே பொன்னன் வெளி அல்லது மாணிக்கமடு எனப்படுகின்ற ஒரு இடமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன