சினிமா
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாரூக் கான்..! – காரணம் என்ன தெரியுமா? வைரலான வீடியோ.!
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாரூக் கான்..! – காரணம் என்ன தெரியுமா? வைரலான வீடியோ.!
பாலிவுட் திரையுலகின் “கிங்” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷாரூக் கான் நேற்று அதாவது, நவம்பர் 2 ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளை மிகுந்த எளிமையுடனும், ஆனால் ரசிகர்களின் அன்பில் மூழ்கியும் கொண்டாடினார். கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய சினிமாவின் இதயத் துடிப்பாக விளங்கும் ஷாரூக் கான், தனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் சிறு மாற்றம் நடந்தது.கடந்த வருடங்களைப் போலவே, இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது புகழ்பெற்ற மாளிகை முன்பு திரண்டு, அவரைக் காண ஆரவாரத்துடன் காத்திருந்தனர். அவரைக் காண ரசிகர்கள் ஆர்வத்தில் அங்கு கூடியிருந்தனர்.பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களுக்கு கை அசைத்து, பறக்கும் முத்தங்களை வழங்கி மகிழ்விக்கும் ஷாரூக் கான், இந்த முறை அதில் சற்று மாற்றம் செய்தார். அவர் ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை பகிர்ந்தார்.அந்த பதிவில் ஷாரூக் கான், “எனக்காக காத்திருந்த என் அன்பான ரசிகர்களை நான் வெளியே சென்று பார்க்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு அறிவித்துள்ளனர். இதற்கு நான் மனமார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த முடிவை எடுக்க வேண்டியதற்குக் காரணம் கூட்டக் கட்டுப்பாட்டு பிரச்சனைகள் தான். உங்களின் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவே இந்த முடிவை எடுத்தேன்.” என எழுதியிருந்தார். அவரின் இந்த பதிவு வெளிவந்ததும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதனைப் பகிர்ந்து, அவரின் பொறுப்புணர்வைப் பாராட்டினர்.இந்த மன்னிப்பு பதிவுக்குப் பிறகு, ஷாரூக் கான் தனது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசை அளித்தார். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தினை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய வீடியோவைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளார்.
