Connect with us

இலங்கை

விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; பெரும் அதிர்வலை

Published

on

Loading

விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; பெரும் அதிர்வலை

   தமிழகத்தில் கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

Advertisement

கோவை விமான நிலையம் அருகே நேற்று இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது  அப்பகுதிக்கு  வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக  தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார்.

பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற  மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

Advertisement

  ஆண் நண்பர் மயக்கம் தெரிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் முற்புதர் பகுதியில் அரைகுறை ஆடையுடன் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன