சினிமா
‘அகோரி’ அடையாளம் மாறிடுச்சு.. கலையரசனின் நெகிழ்ச்சி பேட்டி..
‘அகோரி’ அடையாளம் மாறிடுச்சு.. கலையரசனின் நெகிழ்ச்சி பேட்டி..
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் முக்கிய போட்டியாளராக கலையரசன் களமிறங்கினார். அவர் உள்ளே நுழையும் போது அகோரி என்கின்ற தனது அடையாளத்தை தனது குடும்பத்திற்காக மாற்றுவதற்காகவே பிக் பாஸில் கலந்து கொண்டதாக தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் இருக்கின்ற இடமே தெரியாமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் பிக் பாஸ் வீட்டிற்குள் காணப்பட்டார். இவர் மீது சுவாரஸ்யம் பெரிதாக காட்டப்படாத நிலையில் தான் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இறுதியாக பிக் பாஸ் மேடையில் வைத்து ‘உங்களை பாராட்டலாம், இவ்வளவு பீப் போடுறீங்க’ என்று கோபமாக விஜய் சேதுபதியும் விமர்சித்து இருந்தார். அதன்பின்பு மைக்கை வாங்கிய கலையரசன் தன்னை இத்தன நாள் பிக்பாஸில் வைத்திருந்ததற்காக ஆடியன்ஸுக்கு நன்றி சொல்லி வெளியேறினார். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கலையரசன் தற்போது விஜய் டிவிக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், நான் வெளியே வந்ததற்கு பிறகு அகோரி என்ற அடையாளம் மாறி உள்ளது. அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கின்றது. என்னை பார்த்ததும் பலர் என்னுடன் வந்து செல்பி எடுக்கின்றார்கள். பிக் பாஸ் வீட்டில் உண்மையாகவே என்னால் பெரிதளவில் ஆர்வம் காட்ட முடியவில்லை. அங்கிருந்தபோது ஏற்பட்ட மெண்டல் ஹெல்த், பிசிக்கல் என்பவை மூலம் தான் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் மக்களும் என்னை இத்தனை நாள் இவர் இருந்தது போதும், அவர் குடும்பத்துடன் இருக்கட்டும் என்று நினைத்து வெளியே அனுப்பி விட்டார்கள்.மேலும் நான் பதிமூன்று வருஷமாக ஆச்சிரமத்தில் தான் வளர்ந்தேன். அங்கு வெளி உலக தொடர்பு இருக்காது. எனவே பிக் பாஸ் வீட்டில் இது பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. என்னுடைய மெண்டல் ஹெல்த், பிசிக்கல் காரணமாகத்தான் நான் வெளியே வர காரணமாக இருந்தது. மேலும் எனக்கு அங்கு கனி அக்காவை தான் பிடிக்கும். அவங்க ரொம்ப பாசிட்டிவா பேசுவாங்க.. நான் தப்பே பண்ணல என்றாலும் அந்த தப்பை ஏற்றுக் கொள்வேன், இதனால் எனக்கு பேசுவாங்க.. அவங்க ரொம்ப நல்ல டைப்.. பார்வதியையும் எனக்கு பிடிக்கும்.. அவங்களும் என்னோட நல்ல க்ளோஸ் என்று தெரிவித்துள்ளார்.
