இலங்கை
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகள் பயன்படுத்திய கார் மீட்பு!
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகள் பயன்படுத்திய கார் மீட்பு!
அம்பலாங்கொடை நகர சபைக்கு சொந்தமான பிரதான பொது நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனியவில் உள்ள எகொடவெல சந்திக்கு அருகில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில், அஹுங்கல்ல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், பெங்வல-எகொடவெல பகுதி வழியாக துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த வர்த்தகர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் பாதாள உலகக்குழு உறுப்பனர்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
