Connect with us

பொழுதுபோக்கு

இது பிக்பாஸ் ஹவுஸ் இல்ல பைத்தியகார ஹவுஸ்… கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுங்க; போர்க்களமான வீடு

Published

on

kamru

Loading

இது பிக்பாஸ் ஹவுஸ் இல்ல பைத்தியகார ஹவுஸ்… கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுங்க; போர்க்களமான வீடு

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 30 நாட்களை எட்டியுள்ள நிலையில் இதுவரை எந்த சுவாரஸ்யமும் இன்றி செல்வதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் போட்டிகளும் இருக்கும் பிரச்சனைகளும் இருக்கும். ஆனால், சீசன் 9 நிகழ்ச்சி வெறும் பிரச்சனைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.அதிலும், வி.ஜே.பார்வதி, திவாகர் செய்யும் வேலைகள் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கி வருகிறது. இவர்களை எல்லாம் ஏன் உள்ளே வைத்திருக்கிறீர்கள்? நாமினேஷனில் வெளியே அனுப்ப வேண்டியது தானே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்கமாட்டோம் என்ற எண்ணத்தில் திவாகரும் பார்வதியும் சுற்றி வருகின்றனர்.திவாகர் அவ்வப்போது சக போட்டியாளர்களி கேரக்டர் மற்றும் தகுதி, தராதரம் என்று பேசிவருகிறார். இதுவும் பலரையும் கடுப்பாக்கியுள்ளது. திவாகரை அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று விஜய் சேதுபதி வான் செய்த பிறகும் திவாகர் தொடர்ந்து அதையே தான் வேலையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியை பரபரப்பாக்க வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கிய பிறகும் மோதல்கள் வெடித்து தான் வருகிறது.இவங்கள என்னதான் செய்வது என்று பிக்பாஸிற்கே தெரியவில்லை. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அவ்வீட்டின் சூழல் மற்றும் மக்களின் மனநிலையை பாதிப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரமே பார்வதி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலையரசன் வெளியேறினார். இந்த வாரம் பார்வதி கண்டிப்பாக வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான ப்ரொமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பிரவீனும், பிரஜினும் கம்ருதீனை வம்பிழுத்து பிராங்க் செய்யலாம் என்று திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த பிளான் ஒர்க் அவுட்டாகி இருவரும் பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்ள அனைவரும் அவர்களை தடுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் முட்டிக் கொண்டு கட்டிப்புரளுகின்றனர்.#Day30#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/jrFCHSPK8jஇதனை பார்த்த சாண்ட்ரா பிரஜினை பார்த்து நீ இப்படி பண்ணுவனு நான் எதிர்பார்க்கவில்லை என்று அழுகிறார். இதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன பிக்பாஸ் ஹவுஸா இல்ல பைத்தியகார ஹவுஸா இப்படி அடிச்சிக்கிட்டு பிராங்க் பண்றாங்க . இந்த வீடியோ தான் பிக்பாஸ் சீசன்லயே அதிக வியூஸ் போகும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன