இலங்கை
இறுதி காலாண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
இறுதி காலாண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
இந்த வருட இறுதி 04 மாதங்களில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனம் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் 2,50,000 வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 63,000 கோடி ரூபா வரி வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் மாத்திரம் வாகன இறக்குமதிக்காக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் (36,431 கோடி அமெரிக்க டொலர்) நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், வாகன இறக்குமதிக்காக அதிக நிதி கடந்த செப்டெம்பர் மாதமே செலவிடப்பட்டுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வாகன இறக்குமதிக்காக கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த செப்டெம்பர் மாதம் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர் (8,682 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தரவு அறிக்கைகளுக்கமைய ஏப்ரல் மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 134 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், மே மாதத்தில் 118 மில்லியின் ரூபா வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜூன் மாதத்தில் இலங்கைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 163 மில்லியன் டொலரும் ஜூலை மாதத்துக்கான வாகன இறக்குமதிக்காக 193 மில்லியன் டொலர் நிதியும் செலவுசெய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை 249 மில்லியன் டொலர் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 61 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
அரச வருமானம் எதிர்பார்க்கக்கூடியளவுக்கு அதிகரிப்பதற்கு வாகன இறக்குமதியில் கிடைத்த வருமானம் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
