Connect with us

டி.வி

கானா வினோத்தின் வீட்டின் நிலை இதுவா.? அடுத்தடுத்து வெளியான உண்மைகள்

Published

on

Loading

கானா வினோத்தின் வீட்டின் நிலை இதுவா.? அடுத்தடுத்து வெளியான உண்மைகள்

வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர் கானா வினோத்.  இவர் எழுதி இயக்கி பாடிய பாடல்கள்  வெளியில் பிரபலமாக காணப்பட்டாலும் இதை இவர் தான் பாடினார் என்று பலருக்கும் தெரியவில்லை.  அந்த வகையில்  சுந்தர். சி இயக்கத்தில் வெளியான  கலகலப்பு படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு குச்சி ஒரு குல்பி என்ற பாடலை கானா வினோத் தான் பாடியுள்ளார்.  இந்த பாடல்  பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. மேலும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் புள்ளிங்கோ பாடலை பாடியதும் கானா வினோத் தான். அந்தப் பாடலும் அந்த சமயத்தில் ட்ரெண்டிங்கில் வைரலானது. உதயநிதி நடித்த கெத்து படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முட்டை பஜ்ஜி பாடலை பாடியது கானா வினோத்.  அட்டி படத்தில் கில்லி பம்பரம் பாடலையும், அதன் இன்னொரு பாடலையும் கானா வினோத் பாடியுள்ளார்.  அந்த படத்தில் அவர் நடித்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல  சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் ஆத்துல ஒரு கால் பாடலையும் எழுதி உள்ளார்.  இப்படி பல  பாடல்களை எழுதி பாடியுள்ளார் கானா வினோத். ஆனாலும்  அவை பற்றிய தகவல்கள் தற்போது தான்  பிரபலமாகிக் கொண்டுள்ளன.இந்த நிலையில், கானா வினோத்தின்  வீட்டு நிலை பற்றி தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  அதில்  மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்டவாறு அவருடைய வீடு காணப்படுவதோடு  அங்கு இருந்த பெரியவர்கள்  கானா வினோத் பற்றி  கூறியவையும் வைரல் ஆகி வருகின்றன.அதன்படி அங்கிருந்த பெரியவர்கள் கூறுகையில், எங்களுடைய குடும்பம் இசைக் குடும்பம்.  கானா வினோத் பல பாடல்களை பாடியுள்ளார். இந்த இடத்தில் இருந்துதான் அவர் பாடல்களை எழுதுவார். அவருக்கு  ரசிகர்கள் மன்றம்  திறக்கும் அளவுக்கு அவர் பிரபலமாக காணப்பட்டார். தற்போது வந்த திவாகர்  தான் பல ஆண்டுகள் பிரபலம் என்று கூறினார். ஆனால் அதற்கு மேலாகவே  வினோத் பிரபலமாக காணப்படுகின்றார். பலரும் வந்து தங்களுக்கு பாடல் எழுதி தாங்க என்று கேட்பார்கள்.  வினோத்தும் எழுதிக் கொடுப்பார். ஆனால் அவருடைய பெயர் வெளியில் வராது. அவர் எழுதிய பாடலை வைத்து பலரும் பிரபலம் தேடி கொண்டு உள்ளார்கள். நாங்கள் அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.  மேலும் ராயபுரம் மீனாட்சியம்மன் பேட்டையில் தான் வினோத் பிறந்து வளர்த்துள்ளார். ஆகவே அங்குள்ள மக்கள் அவர் பிக் பாஸில் வெற்றி பெற்று வர வேண்டும்,  நாங்கள் மாலையோடு காத்திருப்போம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன