வணிகம்
சவரனுக்கு ரூ.800 குறைந்தது! நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய (நவ. 4) தங்கம் விலை
சவரனுக்கு ரூ.800 குறைந்தது! நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய (நவ. 4) தங்கம் விலை
சென்னை: நவம்பர் மாதம் தொடங்கிய பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 4) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது..கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. குறிப்பாக, பண்டிகைக் காலமான தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை மெல்லக் குறையத் தொடங்கியது.நேற்று விலை உயர்ந்தது, இன்று அதிரடி சரிவு!நேற்றைய நிலவரம் (நவம்பர் 3): நேற்று முன்தினம் விலை குறைந்த நிலையில், நேற்று (நவம்பர் 3) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து, ரூ.11,350-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து, ரூ.90,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்றைய நிலவரம் (நவம்பர் 4):18 காரட் தங்கம் விலை:22 காரட் தங்கம் போலவே, 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது.18 காரட் தங்கம் விலையில் கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,390-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.75,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை நிலவரம்:தங்கம் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி சரிவு, நகை வாங்குவதற்குத் திட்டமிட்டிருப்பவர்களுக்குச் சாதகமான செய்தியாக அமைந்துள்ளது
