வணிகம்
சொந்த வீடு இருந்தா போதும்…மாதம் ரூ.30000 கிடைக்கும்; சீனியர் சிட்டிசன்கள் இந்த ஸ்கீம் பற்றி தெரிஞ்சுகோங்க!
சொந்த வீடு இருந்தா போதும்…மாதம் ரூ.30000 கிடைக்கும்; சீனியர் சிட்டிசன்கள் இந்த ஸ்கீம் பற்றி தெரிஞ்சுகோங்க!
நம்மில் பலருக்குப் பணி ஓய்வு காலத்திற்குப் பிறகு நம்முடைய நிதி நிலை எப்படி இருக்குமோ என்ற கவலை நிச்சயம் இருக்கும். வழக்கமான மாத வருமானம் நின்றுபோன பிறகு, சேமிப்புகளை நம்பியோ அல்லது பிள்ளைகளின் உதவியை நாடியோ வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், நீங்கள் வாழக்கூடிய வீடு உங்களுக்குச் சொந்தமானதாக இருந்தால், அதன் மூலமாகவே நிலையான மாத வருமானத்தைப் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?சொந்த வீடு கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது.வழக்கமான கடனுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கும் என்ன வித்தியாசம்?வழக்கமான வீட்டுக் கடனில் (Home Loan), நீங்கள் வங்கிக்குத் தவணையைச் செலுத்துவீர்கள். ஆனால், ரிவர்ஸ் மார்ட்கேஜில் இது தலைகீழாகச் செயல்படும்—வங்கியானது வீட்டு உரிமையாளருக்கு ஒவ்வொரு மாதமும் பணத்தைக் கொடுக்கும்.வாடகை அல்ல, வருமானம்: இந்தத் திட்டத்தில், உங்கள் வீடு வங்கியிடம் அடமானமாக வைக்கப்படும். ஆனால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அதே வீட்டில் வசிக்கலாம். அதே சமயத்தில், மாதா மாதம் ஒரு நிலையான வருமானம் உங்களுக்குக் கிடைக்கும்.பென்ஷன் தொகை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?வங்கியானது இந்தக் கடன் ஏற்பாட்டில், சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பை கணக்கீடு செய்து, வீட்டு உரிமையாளர் பெறவேண்டிய தொகையை நிர்ணயம் செய்கிறது.இந்தத் தொகையை நீங்கள் பெரிய தொகையாக (Lump Sum) அல்லது மாதாந்திரத் தவணையாக (பென்ஷன்) பெறலாம்.இந்தத் தொகை சொத்தின் மதிப்பு, கடன்பெறுநரின் வயது மற்றும் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டு அமையும்.இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்இந்தக் கடனைப் பெறுபவர் தன் வாழ்நாள் முழுவதிலும் வங்கிக்கு எந்த ஒரு பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை.ஒருவேளை சொத்தை விற்ற பிறகு, அதன் மதிப்பு நிலுவையில் உள்ள கடன் தொகையை விட அதிகமாக இருந்தால், மீதமுள்ள தொகை சட்டபூர்வமான வாரிசுகளுக்கு வழங்கப்படும்.யார் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?விண்ணப்பதாரர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.சொந்த வீடு கொண்டவராகவும், அந்த வீட்டின் மீது எந்த ஒரு கடனும் இருக்கக் கூடாது. அடமானமாகக் காட்டிய அந்த வீட்டை விண்ணப்பதாரர் உபயோகித்துக் கொண்டிருக்க வேண்டும்.ஒருவேளை சொத்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்குச் சொந்தமானதாக இருந்தால் (கணவன் மற்றும் மனைவி), அவர்கள் இருவருமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.எங்கே இந்தத் திட்டம் கிடைக்கும்?ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மூலமாக அங்கீகாரம் பெற்ற இந்தத் திட்டம் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) மற்றும் குறிப்பிட்ட சில தனியார் வங்கிகளிலும் கிடைக்கிறது.பென்ஷன் இல்லாதவர்கள் அல்லது வேறு எந்த நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு, பணி ஓய்வுக்குப் பிறகு சீரான மாத வருமானம் பெறுவதற்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது. சீனியர் சிட்டிசன்கள் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பராமரிக்கவும், தங்களுடைய சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்
