சினிமா
ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு நான் தான் தந்தை!! மாதம்பட்டி ரங்கராஜ்..
ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு நான் தான் தந்தை!! மாதம்பட்டி ரங்கராஜ்..
பிரபல சமையல் கலைஞராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், சில மாதங்களுக்கு ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது.தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றும் ஜாய் கிரிஸில்டா இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டார். இது நடந்து சில வாரங்களில் தன்னை ஏமாற்றிவிட்டார் ரங்கராஜ் என்று புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினர் கிரிஸில்டா.இதுகுறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், மாநில மகளிர் ஆணையம் ஒரு பரிந்துரை கடித்தத்தை வெளியிட்டுள்ளது.நடந்துமுடிந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை 2வது திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையின் தந்தை தான்தான் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.குழந்தை மற்றும் ஜாய் கிரிஸில்டாவை பராமரிக்கும் பொறுப்பு மாதம்பட்டி ரங்காஜுக்கு உண்டு, ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அளித்துள்ளது.
