சினிமா
திருமணத்திற்கு பின் மனைவிக்கு தாலி வேண்டாம்னு சொன்னேன்!! சின்மயி கணவர் ஓபன் டாக்…
திருமணத்திற்கு பின் மனைவிக்கு தாலி வேண்டாம்னு சொன்னேன்!! சின்மயி கணவர் ஓபன் டாக்…
பாடகி சின்மயின் கணவரும் நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்தரன், சமீபத்தில் அந்தல ராக்ஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார். நடிகை சமந்தாவின் நெருங்கிய நபரான ராகுல், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு ஆறுதலாகவும் இருந்தார்.நடிகை ராஷ்மிகா மந்தனாவை வைத்து தி கேர்ள்ஃபிரண்ட் என்ற படத்தினை இயக்கியுள்ளார். நவம்பர் 7 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.அப்படி அவர் அளித்த பேட்டியொன்றில், திருமணத்திற்கு பின் நான் என் மனைவி சின்மயிடம், தாலி அணிவதா? இல்லையா? என்பது உன் விருப்பம் என்று சொன்னேன். நான் அதை அணிய வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.ஏனென்றால் ஆண்களுக்கு திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை, அதே நேரத்தில் பெண்களுக்கு திருமணமானதற்கான அறிகுறி இருக்க வேண்டும் எதிபார்க்கப்படுகிறது என்று சின்மயிடம் கூறியதாக ராகுல் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
