இலங்கை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
