Connect with us

பொழுதுபோக்கு

நா மட்டும் என்ன இளிச்சவாயா? பெண்ணோட தனிப்பட்ட விஷயத்த ஓபனா பேசுறாங்க; பிக்பாஸில் நடப்பது என்ன?

Published

on

big 1

Loading

நா மட்டும் என்ன இளிச்சவாயா? பெண்ணோட தனிப்பட்ட விஷயத்த ஓபனா பேசுறாங்க; பிக்பாஸில் நடப்பது என்ன?

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிப்பராகி வருகிறது. முந்தைய சீசன்களில் திரைப்பிரபலங்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன்பின்னர் திரைப்பிரபலங்களுடன் சமூக வலைதள பிரபலங்களும் பங்கெடுத்தனர். தற்போது பிக்பாஸ் சீசன் 9  நிகழ்ச்சியில் முழுவதும் சமூக வலைதள பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியாளர்கள் பட்டியல் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.பிக்பாஸ் வீடு என்றாலே போட்டிகளும், பிரச்சனைகளும் இருக்கத் தான் செய்யும். ஆனால், தற்போதைய சீசனில் மக்களே ‘அட நிறுத்துங்கடா’ என்று சொல்லும் அளவிற்கு பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தன. ஒவ்வொரு நாளும் பிரச்சனை என்றே பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. இது பார்ப்பவர்களையும் வெறுப்படைய செய்தது. மேலும், வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் ரேட்டிங்கும் கீழே சென்றதாக தகவல் வெளியானது.பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை, கலையரசன் ஆகியோர் ஒவ்வொரு வாரமாக வெளியேறியுள்ளனர். களையிழந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் விதமாக வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளது பிக்பாஸ். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் 50 அல்லது 60 நாட்களுக்கு மேல் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எல்லாம் வொர்த் இல்லை என்று தெரிந்த பிக்பாஸ் 30 நாட்களுக்கு முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களை களத்தில் இறக்கியிருப்பதாக கூறப்படுகிறது.பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் போட்டியாளர்களை நல்லா வாங்கு வாங்கு என்று வாங்கினர். இதை எப்படி பழி தீர்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த திவாகரும் பார்வதியும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்த ரிவ்யூவில் வச்சு செய்.. செய் என்று செய்துவிட்டனர். அதாவது, முதலில் பேசிய திவாகர், திவ்யாவை நான் ரொம்ப போல்டா நினைச்சேன் அனா அவங்க அப்படி இல்லை. பெண்ணோட தனிப்பட்ட விஷயத்தை அமித் ஓபனா பேசுறாரு என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதேபோன்று பார்வதியும் தன் நேரம் வந்ததும் எல்லோரையும் வாங்கு.. வாங்கு என்று வாங்கிவிட்டார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன