இந்தியா
நினைவு இல்லமாக மாறும் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வீடு: அரசு திட்டம்
நினைவு இல்லமாக மாறும் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வீடு: அரசு திட்டம்
சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த கட்டிடத்தை என்ன செய்வது என்று லீ குவான் யூ பிள்ளைகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான பிரச்சனைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிங்கப்பூரில் 1898-ஆம் ஆண்டு கட்டப்பட்ட லீ குவான் யூ வீடு பாதுகாப்பிற்குத் தகுதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய பாரம்பரிய வாரியம் மற்றும் சிங்கப்பூர் நில ஆணையம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளன. மேலும், இந்த வீடு கடந்த 1950-களில் சிங்கப்பூர் சிங்கப்பூர் ஒரு காலனித்துவ நாட்டிலிருந்து சுதந்திர தேசமாக மாறிய முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆலோசனைக் குழுவானது அந்த இடம் பாதுகாப்பதற்கு தகுதி உள்ள இடம் என்று கண்டறிந்துள்ள நிலையில் இந்த இடம் பாதுகாக்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டால் அது பாரம்பரியப் பூங்கா போன்ற பொது இடமாக மாற்றப்படும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.எந்த வழிமுறை எடுக்கப்பட்டாலும், அரசாங்கம், லீ குவான் யூவின் விருப்பங்களை மதிக்கும் என்றும் கட்டிடங்களில் உள்ள லீ மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட வசிப்பிடங்களின் அனைத்து தடயங்களையும் நீக்கிவிடும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. லீ குவான் யூ மரணத்திற்குப் பிறகு, அவருடைய மூன்று குழந்தைகளுக்கும் இடையே ஏற்பட்ட பகிரங்கமான மோதலில், அந்த வீட்டை என்ன செய்வது என்ற கேள்வி ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியது.கடந்த ஆண்டு நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவி விலகிய மூத்த மகன் லீ சியன் லூங், அந்தச் சொத்தைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஒருவேளை அதை பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார். மேலும், சகோதரி லீ வெய் லிங் மற்றும் சகோதரர் லீ சியன் யாங் ஆகியோர் தங்கள் தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, அந்தப் பங்களா இடித்து அகற்றப்பட வேண்டும் என்று கூறினர்.வீட்டைப் பொதுமக்களுக்காகத் திறந்தால் அது குழப்பமான நிலைக்கு வந்துவிடும் என்றும், அதை அகற்றுவது அக்கம் பக்கத்தில் உள்ள நில மதிப்புகளை மேம்படுத்தும் என்றும் தான் நம்புவதாகவும், லீ குவான் யூ கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு காலமான லீ குவான் யூ, தன் வீட்டை இடித்துவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் என் பிள்ளைகள் மற்றும் வாரிசுகளை தவிர மற்றவர்கள் யாரும் அதை பயன்படுத்தக் கூடாது என்றும் உயில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
