டி.வி
பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த பிரியங்கா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் டுவிஸ்ட்
பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த பிரியங்கா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் டுவிஸ்ட்
தமிழ் சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களுக்கு பெரும் ரசனை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகும். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் துவங்கிய முதல் நாளிலிருந்தே, பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான தருணங்கள், போட்டியாளர்களின் சண்டைகள் என அனைத்தும் இடம்பெற்று வருகின்றன.சமீபத்தில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜின் மற்றும் அமித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரி எப்போதும் நிகழ்ச்சியின் டென்ஷனை அதிகரிக்கும். புதிய போட்டியாளர்களின் வருகையின் மூலம் வீட்டின் சற்று மாற்றம் அடைந்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் “ஆஹா ஓஹோ” என்ற பெயரில் ஹோட்டல் போட்டி நடைபெற உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த சீசனில் புதிய திருப்பமாக இருக்கிறது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகின்றனர். அதாவது, விஜய் டிவி VJ பிரியங்கா மற்றும் தீபக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுக்கின்றனர். அத்துடன் பிக்பாஸ்,”வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாக தங்களது பணிகளைத் தவறாமல் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறுகின்றார். மேலும் ஊழியர்கள் விருந்தினர்களுக்கான பணிவிடை மற்றும் உபசரிப்பையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.” என்கிறார். மேலும், பிரியங்கா மற்றும் தீபக் இந்த போட்டியினூடாக “சீசன் 9 நிகழ்ச்சி வேற லெவெலில் மாறும்” எனவும் குறிப்பிட்டனர். இவர்களின் வருகையால் பிக்பாஸ் வீடு சூடுபிடித்து, பார்வையாளர்களின் கவனத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
